உள்ளாட்சித் தேர்தல் : அதிமுக விருப்பமனு விநியோக தேதி அறிவிப்பு

Default Image

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு பெற்று கொள்ளலாம் என்று அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016 ஆண்டு முதல் 3 வருடங்களாக நடைபெறாமல் உள்ளது.வருகின்ற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறுகிறது என்று தகவல் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அந்த அறிக்கையில்,உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் மாவட்ட தலைமை அலுவலகங்களில் நவம்பர் 15, 16-ஆகிய  தேதிகளில் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் உள்ளாட்சி பதவிகளுக்கான கட்டண விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
விருப்ப மனு கட்டணம் விவரம்: 

  • மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.25,000 விருப்ப மனு கட்டணம்
  • வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.5,000 விருப்ப மனு கட்டணம்
  • நகர்மன்ற தலைவர் பதவி ரூ.10,000 விருப்ப மனு கட்டணம்
  • நகர்மன்ற வார்டு உறுப்பினர் பதவி ரூ.2,500 விருப்ப மனு கட்டணம்
  • பேரூராட்சி தலைவர் பதவி ரூ.5,000 விருப்ப மனு கட்டணம்
  • பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி ரூ1,500 விருப்ப மனு கட்டணம்
  • மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு ரூ.5,000  விருப்ப மனு கட்டணம்
  • ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் ரூ.3000 விருப்ப மனு கட்டணம்

 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்