உள்ளாட்சித் தேர்தல் ! மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016முதல் 3 வருடங்களாக நடைபெறாமல் உள்ளது.வருகின்ற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறுகிறது என்று தகவல் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார். மின்னணு வாக்கு எந்திரம், வாக்குச்சாவடி மையம், அதிகாரிகளை இறுதி செய்வது குறித்து ஆலோசனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.