உள்ளாட்சி தேர்தல்;கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் – ஓபிஎஸ்,இபிஎஸ் முக்கிய அறிவிப்பு..!

Published by
Edison

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து அதிமுக தலைமை ஓபிஎஸ், இபிஎஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டமாக நடத்தப்படவுள்ளது.

இதனால், தேர்தல் பணிகளில் குறித்து அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.அதன்படி,காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு வார்டு – ஒன்றியக் குழு வார்டுகளில் வார்டு உறுப்பினராக போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டார்.

இந்நிலையில்,காஞ்சிபுரம் மாவட்டம் கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து அதிமுக தலைமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும்,இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் 6.10.2021, 9.10.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன்,

  • திருமதி மைதிலி திருநாவுக்கரசு, Ex. M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்.
  • திரு. வாலாஜாபாத் பா. கணேசன், Ex. M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்

ஆகியோர் இன்று முதல் கூடுதலாக நியமிக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களோடு, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் இணைந்து தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்”,என்று தெரிவித்துள்ளனர்.

Recent Posts

PBKS vs RR : பஞ்சாபை பந்தாடிய ராஜஸ்தான்! 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

7 hours ago

PBKS vs RR : பஞ்சாப் பந்துவீச்சை சிதறடித்த ராஜஸ்தான்! வெற்றிக்கு 206 ரன்கள் டார்கெட்!

சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

9 hours ago

“சினிமாவில் அவர் CM ஆகலாம்., ஆனால் நிஜத்தில்.?” மீண்டும் விஜயை சீண்டிய பவர்ஸ்டார்!

சென்னை  : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…

10 hours ago

CSK vs DC : மீண்டும் சொதப்பல்.. மீண்டும் தோல்வி! டெல்லியிடம் வீழ்ந்த சென்னை!

சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…

11 hours ago

விசாரணை கைதி மரணம்., தூத்துக்குடி டிஎஸ்பிக்கு ஆயுள் தண்டனை!

தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…

11 hours ago

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடங்குவது எப்போது? நிர்மலா சீதாராமன் விளக்கம்!

சென்னை :  மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…

12 hours ago