வருகிறது உள்ளாட்சி தேர்தல்..!வராது TNPSC தேர்வுகள்..ஒத்திவைப்பு..!
- வருகிறது தமிழத்தில் உள்ளாட்சி தேர்தல்- TNPSC தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- தேர்வு நடைபெறும் மாற்றுத் தேதியையும் TNPSC அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் தான் TNPSC தேர்வு தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் அரசு தேர்வணையம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் வரும் 22 மற்றும் 30- ந் தேதிகளில் நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
மேலும் இது குறித்து TNPSC கூறுகையில் இந்த நாட்களில் தான் நடைபெற இருந்த குருப்-1 சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுகள் தேர்தலையடுத்து ஜனவரி மாதம் 5ந் தேதி முதல் 12ந் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
விண்ணப்பத்தாரர்கள் தங்களது தனித்துவ விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தங்களது நுழைவுச்சீட்டினை 27.12.2019 முதல் 12.1.2020 வரை www.tnpsc.gov.in ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.