தேர்தல் நேரம் நிறைவு! வாக்குசாவடிக்குள் இருக்கும் வாக்காளர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி!

- தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்ட தேர்தலும் தற்போது நிறைவடைந்துள்ளது.
- காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது 5 மணி ஆனதை அடுத்து தேர்தல் நேரம் முடிவடைந்தது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களுகளில் 158 ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. காலியாக உள்ள 91,975 பதவி இடங்களுக்கு முதற்கட்ட தேர்தலில் 45 ஆயிரத்து 336 பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இன்று மீதம் உள்ள 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கான 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணியோடு தற்போது தேர்தல் நேரம் நிறைவடைந்துள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி வாக்குச்சாவடி மையங்களுக்குள் இருக்கும் தகுதியுள்ள வாக்காளர்களுக்கு மட்டும் வாக்களிக்க டோக்கன் வழங்கபட்டு வாக்களிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.