#BREAKING : உள்ளாட்சித் தேர்தல் குறித்து கமல் முக்கிய முடிவு

Default Image
  • வருகின்ற 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு  தேர்தல் நடைபெறுகிறது. 
  • ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 

இந்த மாதம் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்தார். மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி பகுதிகளுக்கும் பின்னர் அறிவிக்கப்படும் என்று பழனிச்சாமி தெரிவித்தார்.

தொகுதி மறுவரையரை பணிகளை முடிக்காமல்  தேர்தல் நடத்தக்கூடாது என்று திமுக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கிய தீர்ப்பில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,இந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது என்று தெரிவித்துள்ளார் .ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு ,வியாபார பங்கீடு மட்டுமே அரங்கேறப்போகிறது.இந்த இரு கட்சிகளும்  எழுதி இயக்கும் இந்த நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்காது என்றும் 2021 இல் ஆட்சியை பிடிப்பதே லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று ரஜினி மக்கள் மன்றம் சார்பாக அறிக்கை வெளியானது.அதில் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை.ஆகையால் யாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர்,கொடி ,ரஜினியின் பெயரையோ,புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக ரஜினி மற்றும் கமல் ஒன்றாக இணைந்தால் தமிழகத்திற்கு நல்லது என்று    எஸ் .ஏ.சந்திரசேகர் கமல் 60 நிகழ்ச்சியில் கூறியது, அதன்பின் கமல் மற்றும் ரஜினி இருவரும் தனித்தனியாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது, இன்று இருவரும் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஒரே நாளில் ஒரே மாதிரியாக வெளியிட்டுள்ள அறிக்கை இவர்களின் அரசியல் போக்கை ஒன்றாக இணைப்பதாக அரசியல் விமசர்கள் கூறுகின்றனர் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்