உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு : நீதிமன்றத்தை நாட திமுக முடிவு
- டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
- உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நீதிமன்றத்தை நாட திமுக முடிவு செய்துள்ளது.
திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்,தமிழகத்தில் புதிதாக உதயமான 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி அளித்தது.பின்பு மாநில தேர்தல் ஆணையம் , முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 30ம் தேதியும் நடைபெறும் என்று அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்தது.
இந்த நிலையில் இன்று திமுகவின் மாவட்ட செயலாளர்கள் ,நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில், தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய தேர்தல் அறிவிப்பாணைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.மேலும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், தேர்தலை நேரெதிரே சந்தித்து, புதியதொரு சரித்திரம் படைத்திட திமுக தயாராக உள்ளது.அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் காலத்தில் சமவாய்ப்பு உருவாக்க வேண்டும்.வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு முறைகளை முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என நீதிமன்றத்தை நாடுவோம் என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.