தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று தெரிவித்தார்.மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவைடைகிறது .2020 -ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கான அட்டவணை :
1ம் கட்ட தேர்தல் : டிசம்பர் 27-ஆம் தேதி
2ம் கட்ட தேர்தல் : டிசம்பர் 30 ஆம் தேதி
வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள் : டிசம்பர் 6 ஆம் தேதி
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் : டிசம்பர் 13-ஆம் தேதி
வேட்புமனுக்களை ஆய்வு செய்யும் நாள்: டிசம்பர் 16-ஆம் தேதி
திரும்ப பெற கடைசி நாள் : டிசம்பர் 18 ஆம் தேதி
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் : 2020 ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி
தேர்தல் நடவடிக்கைகள் முடிவுபெறும் நாள் : 2020 ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி
தேர்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்கும் நாள் : 2020 ஆம் ஆண்டு ஜனவரி 6 -ஆம் தேதி
மாவட்ட ஊராட்சித் மற்றும் ஊராட்சித் ஒன்றியத் தலைவர் /துணைத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சித் துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தலுக்கான கூட்ட நாள் : 2020 ஆம் ஆண்டு ஜனவரி 11-ஆம் தேதி
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 9 பெட்டிகளில் சுமார்…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…