இந்த மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் வேட்புமனு தள்ளுபடி-ஆட்சியர் அதிரடி எச்சரிக்கை

Default Image
  • ஊரக உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • வாக்காளர்களை நிர்பந்திக்க கூடாது என்று கரராக கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழ்கத்தில் இன்னும் சில தினங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தல் ஆனது இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.இந்நிலையில் அதற்கான வேட்பு மனுக்கள்  தமிழகம் முழுவதும் அறிவிக்கபட்ட மாவட்டங்களில் மட்டும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதற்கான பணிகளை எல்லாம் தேர்தல் ஆனையம் முடுக்கிவிட்டுள்ள நிலையில் ஆங்கங்கே உள்ளாட்சி பதவிகள் எல்லாம் சந்தையில் உள்ள பொருட்கள் போல ஏலம் விடப்படுவதாக செய்திகள் வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுதியது.இதற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் கடலூர் ஆட்சியர் அம்மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அந்த எச்சரிக்கையானது ஊரக உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும் மேலும்  தன்னை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என யாரிடமும் வேட்பாளர்கள் நிர்பந்திக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.மேலும்  கடலூரில் இதுவரை 12,235 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன என்ற தகவலையும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்