உள்ளாட்சித் தேர்தல் – கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைப்பு
- தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.
- கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.ஆனால் மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
முன்னாள் மத்திய இணை அமைச்சரும் மாநில தேர்தல் பணிக்குழு தலைவருமான திரு பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் 10/12/2019 தேதியிட்ட அறிக்கை. pic.twitter.com/rilZE7Izbf
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) December 10, 2019
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.இதன் ஒரு பகுதியாக அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக சார்பாக அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில்,உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுக்களில் உள்ளாவர்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை முடித்து அதிக இடங்களில் நமது கூட்டணி வெற்றிபெற பணியாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.