தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி பகுதிகளை தவிர்த்து ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியான நிலையில் தொகுதி மறுவரையரை பணிகளை முடிக்காமல் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலுக்கு தடைவிதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ,புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அனுமதி அளித்தது. புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மறுவரையறை செய்த பின் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று கெடு விதித்தது.
இதனால் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு திரும்ப பெறுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போழுது அவர் கூறுகையில்,புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30-ஆம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
தேர்தலுக்கான அட்டவணை :
1ம் கட்ட தேர்தல் : டிசம்பர் 27-ஆம் தேதி
2ம் கட்ட தேர்தல் : டிசம்பர் 30 ஆம் தேதி
வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள் : டிசம்பர் 9 ஆம் தேதி
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் : டிசம்பர் 16-ஆம் தேதி
வேட்புமனுக்களை ஆய்வு செய்யும் நாள்: டிசம்பர் 17-ஆம் தேதி
திரும்ப பெற கடைசி நாள் : டிசம்பர் 19 ஆம் தேதி
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் : 2020 ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…