விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு – அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அலுவலர்களை நியமனம் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில், வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு தமிழக மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டியிருந்தது. இதனைத்தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட மாவட்டங்களில் தேர்தலை நடத்தி முடிக்க தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் தீவிரமாக செயல்பட்டு, ஆலோசனைகள் மேற்கொண்டனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க தற்போது மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமனம் செய்திட மாவட்ட தேர்தல் அலுவலர்கள், ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
February 28, 2025
தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!
February 28, 2025
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
February 28, 2025
தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!
February 28, 2025