இந்த ஆண்டு தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை.
ஆனால் இதற்கு இடையில் அமமுகவில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகினாரக்ள்.ஏற்கனவே தேர்தல் தோல்வி ஒரு புறம் அமமுகவை துரத்த மறுபுறம் முக்கிய நிர்வாகிகள் விலகல் அவரை துரத்தியது.இதன் விளைவுகளால் சமீபத்தில் நடைபெற்ற நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் தினகரனின் கட்சி போட்டியிடவில்லை.இதற்கு விளக்கமாக அங்கீகாரம் பெற்ற கட்சி, சின்னம் கிடைத்த பின்புதான் தேர்தலில் அமமுக போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமமுக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதனிடையே உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.தற்போது உள்ளாட்சித் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு தனிச்சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அமமுக பொருளாளர் வெற்றிவேல் கூறுகையில்,தனிச்சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையர் நாளை விளக்கம் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.அவர் அளித்த விளக்கத்திற்கு பின்னர் நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என்று வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…