அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி : அமைச்சர் செங்கோட்டையன்
அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி., தொடங்குவது பற்றி சட்டமன்றத்தில் தெரிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தன்னார்வ அமைப்பின் மூலம் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதை அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி., தொடங்குவது குறித்து அரசு ஆய்வு செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.