பெண் என்றாலே எளிதாக நசுக்கிவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக வாழ்ந்தவர் – ஜோதிமணி எம்.பி
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜோதிமணி எம்.பி ட்வீட்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, ஓபிஎஸ், ஈபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சில முக்கிய பிரபலங்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆண்களின் உலகம் என்று நம்பப்படுகிற அரசியலில் தனியொரு பெண்ணாக நின்று போராடி வெற்றி பெற்றவர். அவரது போராட்டம் அவரது தனிப்பட்ட போராட்டம் மட்டுமல்ல.பெண் என்றாலே எளிதாக நசுக்கிவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக வாழ்ந்த ,ஒரு பெண்ணின் கதை. அவருக்கு எனது அன்பும்,அஞ்சலியும்.’ என பதிவிட்டுள்ளார்.
ஆண்களின் உலகம் என்று நம்பப்படுகிற அரசியலில் தனியொரு பெண்ணாக நின்று போராடி வெற்றி பெற்றவர். அவரது போராட்டம் அவரது தனிப்பட்ட போராட்டம் மட்டுமல்ல.பெண் என்றாலே எளிதாக நசுக்கிவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக வாழ்ந்த ,ஒரு பெண்ணின் கதை. அவருக்கு எனது அன்பும்,அஞ்சலியும். pic.twitter.com/XP6oDnsq0B
— Jothimani (@jothims) December 5, 2021