Live : தேர்தல் ஆலோசனை அனைத்துக்கட்சி கூட்டம் முதல்.., பல்வேறு அரசியல் நகர்வுகள் வரை… 

தேர்தல் குறித்த அனைத்துக்கட்சி கூட்டம், கோடை வெயில் தாக்கம், போலீஸ் என்கவுண்டர் என பல்வேறு தகவல்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

Tamilnadu Live

சென்னை : தமிழ்நாடு தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் பதிவு பெற்ற மாநில மற்றும் தேசிய கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தேர்தல் பற்றியும், புதிய வாக்காளர்களை சேர்ப்பது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம், கூடலூர், புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. அதேநேரம், வெயிலின் தாக்கம் அடுத்தடுத்த நாட்களில் அதிகரிக்க தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ள தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்