Live : தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…
தமிழக சட்டப்பேரவை, டெல்லி நாடாளுமன்ற நகர்வுகள் உட்பட பல்வேறு உள்ளூர், சர்வதேச நிகழ்வுகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து கடந்த திங்கள் முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். நேற்று எதிர்க்கட்சி தலைவர் நெல்லை ஓய்வு எஸ்ஐ கொலைக்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்திருந்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை போல டெல்லியில் நாடாளுமன்றத்தில் மத்திய பொது பட்ஜெட் 2025 – 2026 மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக எம்பிக்கள் கூறி வருகின்றனர். ஆனால், அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்காத காரணத்தால் அவர்கள் வெளிநடப்பு செய்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் நகர்வுகளுடன் இன்று கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.