Live : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., பத்ம விருதுகள் வழங்கும் விழா வரை.!
இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல் பத்ம விருதுகள் வழங்கும் விழா என பல்வேறு செய்திகளை இதில் காணலாம்.

சென்னை : நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியதும், கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட முன் வடிவை பேரவையில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தாக்கல் செய்கிறார். உறுப்பினர்களின் கோரிக்கையை அடுத்து கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்து இருந்தார்.
மேலும், டெல்லியில் இன்று மாலை நடைபெறவுள்ள விழாவில் பத்மபூஷன் விருதை பெறுகிறார் நடிகரும் ரேஸருமான அஜித்குமார். சினிமா, கார் ரேஸ் என இரட்டைக் குதிரையில் பயணித்து வரும் அஜித் குமாருக்கு பலர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதனையொட்டி, மனைவி, குழந்தைகளுடன் அவர் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில், விமான நிலையத்தில் குடும்பத்துடன் அஜித் குமார் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.