Live : தமிழக அரசியல் நகர்வுகள் முதல்.. சர்வதேச நிகழ்வுகள் வரை…
சட்டப்பேரவை நிகழ்வுகள், அமைச்சரவை கூட்டம், அமெரிக்கா - சீனா வர்த்தக போர் உள்ளிட்ட பல்வேறு செய்திகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி சார்ந்த மானிய கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அந்த துறை அமைச்சர் அதற்கு பதில் அளித்து வருகிறார்.
இன்று மாலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் புதிய தொழில்களுக்கு முதலீடு, புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்கா – சீனா வர்த்தக போர் குறித்து இரு தரப்பு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளன. ஏற்கனவே, அமெரிக்க அரசு சீனா பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 245% உயர்த்தியது. அமெரிக்கா இதே போன்று வரி விதிப்பு கணக்கில் விளையாடி வந்தால் நாங்களே அதனை கண்டுகொள்ள மாட்டோம். பயப்பட மாட்டோம் என சீனா கூறி வருகிறது குறிப்பிடத்தக்கது.
விரிசல் வரும்
எல்லை மீறி போறீங்க..,
இதுவரை இல்லை., இனியும் இல்லை!
கூட்டணி குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் பதில்!
வரலாறு காணாத வகையில் தங்கம் விலை
சென்னை பூங்காக்கள் :
முதலமைச்சர் மரியாதை :