Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சர்வதேச நகர்வுகள் வரை…
தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள், நாடாளுமன்ற நிகழ்வுகள், சர்வதேச செய்திகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இதில் குறிப்பிடப்படுகின்றன.

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.நேற்றைய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்பு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரித்தார். இதனை தொடர்ந்து பிரதமரை அவர் சந்திக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
நியூசிலாந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் ரிவர்டன் நகரத்தில் இருந்து தென்மேற்கே 170 கி.மீ. தொலைவில் கடலுக்கு நடுவே நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணியளவில் 6.5 ரிக்டர் என்ற அளவுகோலில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.