Live : தைப்பூச திருவிழா முதல்.., பல்வேறு அரசியல் நகர்வுகள் வரை…

இன்று அறுபடை வீடுகளில் நடைபெறும் தைப்பூச திருவிழா முதல் உள்ளூர் உலக அரசியல் நிகழ்வுகள் வரை பல்வேறு செய்திகளை இதில் காணலாம்.

Today Live 11 02 2025

சென்னை : இன்று (பிப்ரவரி 11) தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளில் முருக பக்தர்கள் லட்சக்கணக்கானோர் தரிசனத்திற்காக குவிந்துள்ளனர். பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக சுமார் 5 மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரையாகவும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர்.

மதுரை மாவட்டம் கீழக்கரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. இதனை அமைச்சர் மூர்த்தி துவங்கி வைத்துள்ளார். நூற்றுக்கணக்கான மாடுபிடி வீரர்களும், ஜல்லிக்கட்டு காளைகளும் இதில் பங்கேற்றுள்ளனர்.

பாரிஸில் நடைபெறும் AI உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு அவருக்கு பிரான்ஸ் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான் பிரதமர் மோடியை வரவேற்றார்.

1 of 1
கெளதம்

அமைச்சரவை ஒப்புதல்

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரூ.7,375 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 19,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலூர், தூத்துக்குடி, திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இந்த தொழிற்சாலைகள் அமைய உள்ளது.
  • கெளதம்

    சுழல் 2

  • புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘சுழல்’ இணையத்தொடரின் 2ம் பாகம் வரும் 28ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கெளதம்

    ரூ.237 கோடி வருவாய்

  • நேற்று ஒரே நாளில் பத்திரப்பதிவுத் துறைக்கு ரூ.237 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் கடந்த டிச.5ம் தேதி ரூ.238 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. அதற்கு பின் இதுவே அதிக தொகையாகும்.
  • மணிகண்டன்

    சென்னையில் ராகுல் காந்தி…

  • ஆந்திராவிற்கு ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள வரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, இன்று சென்னை வரவுள்ளார். சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் நாளை செல்ல உள்ளார். இதனால் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
  • மணிகண்டன்

    காங்கிரஸ் வேண்டாம் :

  • 2026 மேற்கு வங்க சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
  • பால முருகன்

    எடப்பாடி பழனிசாமி தைப்பூச வாழ்த்து!

  • வேல் ஏந்தி நம்மை காத்தருளும் தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானின் தைப்பூச நன்னாளில், உலகத் தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர, தொட்டது யாவும் துலங்க, வெற்றி மேல் வெற்றி சேர முருகப் பெருமானின் பூரண அருளை வேண்டி வழிபடுவதுடன், தைப்பூசம் திருநாளை அரசுப் பொது விடுமுறையாக நமது அதிமுக அரசு அறிவித்தமையைப் பெருமிதத்துடன் நினைவு கூர்கிறேன்
  • பால முருகன்

    ரீ ரிலீசாகும் சச்சின்

  • நடிகர் விஜயின் ‘சச்சின்’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, கோடை விடுமுறையில் இப்படத்தை ரீரிலீஸ் செய்யவுள்ளதாக தயாரிப்பாளர் தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
  • பால முருகன்

    அண்ணாமலை வாழ்த்து

  • உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும், இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முருகப் பெருமான் அருளால் தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்ச்சியும், அமைதியும் பெருகிட, அனைத்து வளங்களும் கிடைத்திட வேண்டிக் கொள்கிறேன். அநீதிக்கு எதிரான தர்மத்தின் வெற்றிக்கு வழிகாட்டும் எம்பெருமான் முருகன், நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளை அகற்றி, ஒளியைத் தரட்டும்.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
  • பால முருகன்

    ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

  • தமிழ்நாடு மீனவர்கள் பிரச்னை தொடர்பாக மக்களவையில் விவாதிக்கக் கோரி திமுக சார்பில், மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.
  • மணிகண்டன்

    பிரதமர்கள் சந்திப்பு :

  • பாரிஸ் AI உச்சிமாநாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் இம்மானுவேல் மேக்ரனை சந்தித்தார்.
  • மணிகண்டன்

    டி.ஆர்.பாலு நோட்டீஸ் :

  • தமிழ்நாடு மீனவர்கள் பிரச்னை தொடர்பாக மக்களவையில் விவாதிக்கக் கோரி திமுக சார்பில், மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.
  • மணிகண்டன்

    விஜய் வாழ்த்து :

  • தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள்; உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்! – தவெக தலைவர் விஜய்.
  • 1 of 1

    Follow us

    Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    லேட்டஸ்ட் செய்திகள்