Live : அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் முதல்.., சித்திரை முதல் நாள் வரை…
சித்திரை முதல் நாள், தமிழ்ப்புத்தாண்டு தினம், அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் என பல்வேறு நிகழ்வுகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து. வருகின்றனர். பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இன்று ஏப்ரல் 14-ல் அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், தவெக தலைவர் விஜய் என பலரும் அம்பேத்கர் சிலைக்கு மலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பல அரசியல் தலைவர்கள் அண்ணல் அம்பேத்கருக்கு மரியாதை செய்தி வழியாகவும் பதிவிட்டு வருகின்றனர்.