LIVE : தமிழ்நாட்டிற்கு இன்றும் ரெட் அலர்ட் முதல் வானிலை நிலவரம் வரை.!
இன்றைய நாளின் முக்கிய செய்திகள் அனைத்தும் கிழே கொடுக்கப்பட்டு வருகிறது....
சென்னை : வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகையில் இருந்து 470 கிமீ தென் கிழக்கிலும் சென்னையில் இருந்து 670 கிமீ தெற்கு-தென் கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது.
மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகரும் இந்த மண்டலம், இன்று ‘ஃபெங்கல்’ புயலாக வலுப்பெறவுள்ளது. இப்புயல் மேலும் படிப்படியாக நகர்ந்து 30ஆம் தேதி இரவு சென்னைக்கும் புதுவைக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணாமாக, 19 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை தமிழகத்தில் இன்று கடலூர், மயிலாடுதுறையில் அதி கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.