Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள், மாநில செய்திகள், சரவதேச செய்திகள் என பல்வேறு தகவல்களை இந்த செய்திக்குறிப்பில் காணலாம்.

Today Live 15042025

சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை அடுத்து இன்று முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்வார் என கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அமலில் உள்ள அந்நியர் பதிவு சட்டம் 1940-ன் படி அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் 30 நாட்கள் கால கெடுவுக்கு மேல் தங்கியிருக்கும் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களின் சுய விவரங்களை உள்துறை அமைச்சக அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என கண்டிப்புடன் இச்சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்