Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…
தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் உள்ளிட்ட பல்வேறு செய்திகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தது போல, இன்று பள்ளியில் மாணவர்கள் வன்முறையை தடுக்கும் வண்ணம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய அறிவிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. முதலமைச்சரே பல்கலைக்கழகங்களில் வேந்தர் என்ற சட்டமசோதாவுக்கு அண்மையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஒப்புதல் கிடைத்ததை அடுத்து இன்று இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.