#LIVE: கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.6550 கோடி செலவிடப்பட்டுள்ளது – முதல்வர்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
74-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றினார். சுதந்திர தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 4-வதுமுறையாக கொடியேற்றினார்.
தேசிய கொடியேற்றி பின்னர் முதல்வர் உரையாற்றி வருகிறார்.
- கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு.
- அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% ஒதுக்கீடு வழங்க சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை
- சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ .16,000 முதல் ரூ .17,000 வரை உயர்த்தப்படும்.
- சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் ரூ .8,000 முதல் ரூ .8,5000 வரை உயர்த்தப்படும்.
- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, விரைவில் திறக்கப்படும் .
- கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.6550 கோடி செலவிடப்பட்டு உள்ளது.
- கொரோனா தொற்றுக்கு எதிராக தமிழக அரசு, பொதுமக்களின் ஒத்துழைப்புடன்போராடி வெல்லும் .
- திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் புதிதாக கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இந்தாண்டு தொடங்கப்படும்.
- கேரள அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையால் பரம்பிக்குளம்-ஆழியாறு, பாண்டியாறு – புன்னம்புழா திட்டங்களில் நிலவிய பிரச்சினைக்கு தீர்விற்கு வந்தது.
- மக்களின் அன்பு, ஆதரவை பெற்றுள்ள நான் மக்களின் நலவாழ்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளேன்.
- அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)