Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

அமித்ஷா பேச்சுக்கு எழும் கண்டனங்கள், போராட்டங்கள் முதல் இன்றைய வானிலை நிலவரம் வரையில் பல்வேறு செய்திகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

Today Live 19122024

சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள் பெயரை கூறினால் புண்ணியம் கிடைக்கும் என்று பேசினார். அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சுக்கு நாடுமுழுவதும் எதிர்க்கட்சிகள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறதால், இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழ்நாடு தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்