Live : அண்ணாமலையின் டெல்லி பயணம் முதல்., சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வரை…
தமிழக அரசியல் நகர்வுகள், அமெரிக்க பரஸ்பர வரி விதிப்பு செய்திகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இந்த செய்திக்குறிப்பில் காணலாம்.

சென்னை : தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக தேசியக் குழு உறுப்பினர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து இன்று தேசிய தலைமையுடன் முக்கிய ஆலோசனைக்காக அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஸ்மார்ட் போன், கணினி, செல்போன் கணினி உதிரி பாக்கங்கள், செமி கண்டெக்டர் சிப்கள் உள்ளிட்ட 20 மின்னணு பொருட்களுக்கு அமெரிக்கா புதியதாக விதித்துள்ள பரஸ்பர விதி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த பொருட்கள் மீது ஏற்கனவே இருந்த பழைய வரி விதிமுறை தொடரும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளதால் ஆப்பிள் போன்ற பல்வேறுஅமெரிக்க இறக்குமதியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.