Live : மியான்மர் நிலநடுக்க பாதிப்புகள் முதல்… உள்ளூர், உலக அரசியல் நிகழ்வுகள் வரை…
மியான்மர் நிலநடுக்கம், அதிபர் டிரம்ப் பேச்சு, தவெக பொதுக்குழுவுக்கு பிந்தைய அரசியல் நிகழ்ச்சிகள் என பல்வேறு தகவல்களை இதில் காணலாம்.

சென்னை : நேற்று மியான்மர், தாய்லாந்து, பாங்காங்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்து பாதிப்புள்ளாகியுள்ளன. இதில் மியான்மர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் கூடும் என்ற அபாயம் எழுந்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் நாட்டு மக்களுக்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
இந்திய பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர் என்றும், அவர் புத்திசாலி என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழாரம் சூட்டினார். மேலும், உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும் அது தொடர்பான வர்த்தக பேச்சுவார்த்தை என்பது தொடர்ந்து நடைபெறும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.