#Live: முதல்வர் பழனிசாமியின் முக்கிய அறிவிப்புகள்.!

Default Image

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். இதில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசின் சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதயனிடையே, இன்று காலை முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டார். இந்த உரையாடலின் போது, அரசு அறிவிக்கும் அனைத்து விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும். எந்தளவிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருகிறார்களோ, அந்த அளவிற்கு ஊரடங்கு தளர்வு செய்யப்படும் என்று கூறியிருந்தார். இதனையடுத்து தற்போது செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் பேசி வருகிறார்.

  • அனைத்து மாவட்டங்களில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு.
  • இந்தியாவிலே மருத்துவ சிகிச்சை அளிப்பதலில் தமிழகம் முதன்மையாக விளங்குகிறது.
  • மருத்துவமனையிருந்து படிப்படியாக பலர் குணமடைந்து, வீடு திரும்பி வருகின்றனர்.
  • சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் கொரோனா தொற்று பரவியது.
  • மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால், சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக கண்டறியப்படுகிறது.
  • கோயம்பேட்டில் கொரோனா தொற்று ஏற்படும் என்று முன்பே கணித்து எச்சரிக்கப்பட்டது.
  • கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் சிறந்த பலன் கிடைத்துள்ளது.
  • கொரோனா தொற்று குறித்த அரசின் எச்சரிக்கையை கோயம்பேடு வியாபாரிகள் முதலில் ஏற்கவில்லை.
  • பலமுறை அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியும் வியாபாரிகள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.
  • வேறு இடத்திற்கு சந்தையை மாற்ற வேண்டும் என்று கோயம்பேடு வியாபாரிகளிடம் பலமுறை கேட்டுக்கொண்டோம். 
  • அரசு நடவடிக்கை எடுக்காததால் கோயம்பேட்டில் கொரோனா தொற்று அதிகரித்தது என்று கூறுவது தவறு.
  • வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்களை மீட்பதற்கு படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 
  • அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு முழுமையாக சென்றடைவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
  • பொதுத்தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஆட்சியர்கள் ஏற்படுத்தி தர வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்