Live : அண்ணாமலை டெல்லி பயணம் முதல்.., தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் வரை…
அண்ணாமலையின் டெல்லி பயணம் முதல் தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் வரை பல்வேறு செய்தி குறிப்புகளை இங்கு காணலாம்.

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்தித்ததை அடுத்து இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு சென்றுள்ளது தமிழக அரசியலில் உற்றுநோக்கப்படுகிறது. இந்த சந்திப்பை அடுத்து தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இந்த வாரம் பட்ஜெட் மீதான விவாதத்திற்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.