தமிழகத்தில் கொரோனா வைரஸின் நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து இன்று முதலமைச்சர் பழனிசாமி கொரோனா வைரஸ் தடுக்க, அமைக்கப்பட்ட 12 குழுக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பின்னர் தற்போது சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.
- தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 8 ஆகவும், வைரஸில் இருந்து குணமடைந்து 21 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
- விமான நிலையங்களில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது.
- 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இன்றிரவு தமிழகத்திற்கு முதலில் 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் வரும் என்று கூறியுள்ளார்.
- தமிழகத்தில் இன்னும் 344 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளன.
- தமிழகத்தில் 3,371 வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 2,500 வெண்டிலேட்டர் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- 144 தடை உத்தரவை மீறியவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் 32, 371 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
- அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- அண்டை மாநிலங்களில் இருந்து மளிகை பொருட்கள் கூட்டுறவுத்துறை மூலம் வாங்கப்படும்.
- கொரோனாவின் தாக்கத்தை பொறுத்தே ஊரடங்கு நீடிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
- மருத்துவக்குழு அறிக்கை தந்த பிறகே ஊரடங்கை நீடிப்பது குறித்து முடிவு.
- தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது 2ம் நிலையில்தான் உள்ளது என்றும் 3வது நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
- நோய்த்தொற்று உள்ளவர்களின் குடும்பத்திற்கு, அருகில் வசிப்பவர்களுக்கு ரேபிட் டெஸ்ட் பரிசோதனை செய்யப்படும்.
- 12 நலவாரியங்களில் உள்ள 8.20 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும்.
- சென்னையில் பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
- கொரோனா தடுப்பு பணிகள் என்பது கூட்டுப்பொறுப்பு.
- மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றுகிறார்கள்.
- கொரோனா வைரஸ் இருப்பதை மறைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
- 10ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவேண்டியது அவசியம்.
- கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதியை வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ரூ.100 கூட நிதியாக வழங்கலாம்.
- 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான உதவித்தொகை அவர்களது வீடுகளுக்கு சென்று வழங்கப்படும்.
- தமிழகத்தில் சுமார் 3 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளனர்.
- தமிழகத்தில் 96.30 சதவீதம் பேருக்கு கொரோனா நிவாரண தொகை ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது.
- கொரோனா சிகிச்சைக்கு 137 தனியார் மருத்துவ கல்லூரி, மருத்துவமனைகள் தேர்வு.
- இறுதியாக பொதுமக்கள் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டார்.