Live : தமிழக அரசியல் நிலவரம் முதல்… பதுங்கிய சிரியா அதிபர் வரையில்..

பரபரப்பான தமிழக அரசியல் நிலவரம் , வானிலை நிலவரம், சிரியா அதிபர் தலைமறைவு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை உடனுக்குடன் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

Today Live 08122024

சென்னை : வங்கக்கடலை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நகர தொடங்கியுள்ளதால் வரும் டிசம்பர் 11, 12, 13 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விசிக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் உள்ள ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்துக்களுக்கு அக்கட்சி தலைவர் திருமாவளவன் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்பி கூறியுள்ளார். உயர்மட்ட குழு ஆலோசனைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சிரியா நாட்டில் உள்நாட்டு கிளர்ச்சியார்கள் தலைநகரை சுற்றிவளைத்ததால், அந்நாட்டு அதிபர்  பசார் அல் அசாத்  தனி விமானத்தில் வெளியூர் சென்றதாக கூறப்பட்டுள்ளது. அந்த விமானம் எங்கே சென்றது என தெரியாத நிலை உருவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்