live : தமிழ்நாடு சட்டப்பேரவை முதல்…சுட்டெரிக்கும் வானிலை அப்டேட் வரை!
ஏப்ரல் 1 இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் பற்றிய செய்திகள் கீழே நேரலையில் கொடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கியது. அதன்பிறகு, மார்ச் மாதத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. இப்போது, ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில், மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து விரிவான விவாதம் நடைபெறுகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான கோடை காலத்தில் தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரிக்கும் என முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. இந்த வெப்ப அலைகளால் மின்சார தேவை 9 முதல் 10 சதவீதம் வரை உயரலாம், மேலும் நீர் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. பொதுமக்கள் பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும், போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறித்தியுள்ளார்.