Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு முதல், மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் வரை பல்வேறு முக்கிய தகவல்களை இதில் காணலாம்.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர் கைதானார். அவருக்கு ஜனவரி 8ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலையாள எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குனர் என பன்முக திறமை கொண்ட எம்.டி.வாசுதேவன் நாயர் நேற்று கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நல குறைவால் உயிரிழந்தார் . அவரது மறைவுக்கு கேரள முதலமைச்சர் , மலையாள திரையுலகினர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியுள்ளது.