Live : நடிகர் மனோஜ் பாரதிராஜா மறைவு முதல்.., தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் வரை…
நடிகர் மனோஜ் பாரதிராஜா மறைவு முதல் தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள், அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுக்கள் என பல்வேறு செய்திகளை இதில் காணலாம்

சென்னை : தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவரது மறைவுக்கு நேற்று முதலே பல்வேறு திரைபிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை வழக்கம் போல தொடங்கியுள்ளது. இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். நேற்றைய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று , டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து பேசியுள்ளனர். இது அதிமுக – பாஜக கூட்டணிக்கு அடித்தளமாக அமையும் என அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளது.