live : பரபரக்கும் வக்பு மசோதா விவகாரம் முதல்…ட்ரம்ப் போட்ட அதிரடி வரி வரை!
மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்ட வக்பு மசோதா முதல் ட்ரம்ப் விதித்த வாரியால் எழுந்த கண்டங்கள் குறித்த இன்றயை முக்கிய செய்திகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 4, 2025 அன்று அதிகாலை, சுமார் 12 மணி நேர விவாதத்திற்குப் பிறகு, மாநிலங்களவையில் இந்த மசோதா 128 எம்.பி.க்களின் ஆதரவு வாக்குகளுடனும், 95 எம்.பி.க்களின் எதிர்ப்பு வாக்குகளுடனும் நிறைவேறியது. இதனையடுத்து, எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதாக சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயென் இருவரும் பேசியிருக்கிறார்கள்.