Live : முதலமைச்சரின் இந்தி திணிப்பு கண்டனம் முதல்.., சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வரை…

முதலமைச்சரின் இந்தி திணிப்பு கண்டனம் முதல், சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வரை பல்வேறு செய்திகளை இதில் காணலாம்.

Today Live - 06 03 2025

சென்னை : நேற்று தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் நடத்திய பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இந்தி திணிப்பு குறித்து எதிர்ப்பு தெரிவித்து கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தேன் கூட்டில் கல் எறிவது ஆபத்து. ஒரு மொழியை திணித்தால் அது பகையுணர்ச்சிக்கே இடம் கொடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கோடைகாலத்திற்கு முன்பே தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக ஆரம்பித்துள்ளது. திருப்பத்தூர், ஈரோடு, சேலம், கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக திருப்பத்தூரில் 102 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

கரூரில் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் இன்று அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சோதனை செய்யும் இடங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்