Live : திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் முதல்.., சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி வரை…
சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி முதல் திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் என பல்வேறு நிகழ்வுகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை (மார்ச் 10) முதல் ஏப்ரல் 4 வரையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், அந்த கூட்டத்தில் என்னென்ன பேச வேண்டும், என்பது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி-க்கான கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும், நியூசிலாந்து கிரிக்கெட் அணியும் மோத உள்ளன. இறுதியாக 2000 ஆண்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி ஆட்டத்தில் இதேபோல இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.