Live : பாஜக vs திமுக ஹேஷ்டேக் வார் முதல்…திரைக்கு வந்த திரைப்படங்கள் வரை!
இன்றயை அரசியல் செய்திகள் முதல் சினிமா செய்திகள் வரை முக்கியமான நிகழ்வுகள் கீழே விவரமாக நேரலையாக கொடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை : நேற்று திமுக டிவிட்டரில் #GetOutModi என்கிற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டிருந்த நிலையில், நாளை நான் காலை 6 மணிக்கு #GETOUTSTALIN என பதிவிடுகிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார். அதைப்போலவே, இன்று காலை அந்த ஹேஷ்டேக்கை வெளியிட்டுள்ள நிலையில், பாஜக ஆதரவாளர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். மற்றோரு பக்கம் திமுக ஆதரவாளர்கள் #GetOutModi என்கிற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இதனால் டிவிட்டரில் டேக் வார் அனல் பறந்து கொண்டு இருக்கிறது…
இன்று இரண்டு தமிழ் படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது என்பதால் சினிமா விரும்பிகள் படங்களை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படமும் தனுஷ் இயக்கியுள்ள அவருடைய 3வது திரைப்படமான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படமும் இன்று திரையரங்குகளில் வெளியாகிஉள்ளது.