Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
முதலமைச்சர் தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டம் முதல் அமெரிக்கா - உக்ரைன் உள்ளிட்ட சர்வதேச நிகழ்வுகள் வரையில் பல்வேறு செய்திகளை இதில் காணலாம்.

சென்னை : மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆலோசிக்க இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக, தமாகா, நாதக ஆகியவை பங்கேற்கவில்லை.
டிரம்ப் உடனான சந்திப்பு, உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை டிரம்ப் நிறுத்துவதாக அறிவித்ததற்கு பிறகு, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்காவின் கனிம ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து முதல் முறையாக ஐக்கிய அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார்.