சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று தென்மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரேசில், ரியோவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், நேற்று உரையாற்றிய மோடி, ‘பல்வேறு நாடுகளிடையே நீண்ட காலமாக நீடிக்கும் போர்கள் மற்றும் போர் பதற்றத்தால் தெற்கு நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக உணவு, எரிபொருள், உரங்களுக்கு தட்டுப்பாடும் ஏற்படுகிறது’ என பேசியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் கண்டனம் :
LIC இணையதள முகப்பு பக்கம் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரூ.100 கோடி மோசடி :
வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வந்த சீனாவை சேர்ந்த ஃபாங் செஞ்சின் என்பவரை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது. இதுவரை இவர் ரூ.100 கோடி வரையில் மோசடி செய்துள்ளார் என கூறப்படுகிறது.
அருண் விஜய் ரத்த தானம் :
தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் அருண் விஜய், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தார்.
இந்தி மயமான LIC :
LIC இணையதளம் முழுக்க இந்தி மொழியாக மாறியது குறித்து, LIC தரப்பு கூறுகையில், இது தொழில்நுட்ப கோளாறு. தற்போது சரிசெய்யப்பட்டு வருகிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திராகாந்தி நினைவிடத்தில்…
இந்திராகாந்தி பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.
நீதிமன்றத்தில் இபிஎஸ் :
அறப்போர் இயக்கத்திற்கு எதிராக இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சாட்சி அளிப்பதற்காக நேரில் ஆஜராகியுள்ளார்.
தவெக மாநாடு :
சென்னையில் இருந்து தவெக மாநாட்டிற்கு அழைத்து சென்ற நிர்வாகிகளை உளவுத்துறை போலீசார் போன் செய்து விவரங்களை கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை டவுன் மக்கள் போராட்டம் :
நெல்லை டவுன் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மாநகராட்சி நிர்வாகம் கூறியதால் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டாக்டர் டிஸ்சார்ஜ் :
கத்தி குத்துவால் பாதிக்கப்பட்ட கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதன் சிகிச்சை முடிந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.