LIVE : தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதல்..டெல்லி அரசியல் நிகழ்வுகள் வரை!
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதல் இன்றயை முக்கியான செய்திகள் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை : மத்திய பட்ஜெட் 2025-2026-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1-ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், அடுத்ததாக மாநில பட்ஜெட் தமிழகத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பட்ஜெட் குறித்தும், மற்ற சில முக்கிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்ததற்கு மிக முக்கியமான காரணம் அரவிந்த் கெஜ்ரிவால் தான் எனவும், முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வது தொடர்பாக அவர் எடுத்த அந்த காலதாமதமான முடிவுதான் தோல்விக்கு முக்கிய காரணம் எனவும் ஜன சுராஜ் கட்சித் தலைவரும் தேர்தல் வியூக வல்லுநருமான பிரசாந்த் கிஷோர் வெளிப்படையாக பேசியுள்ளார்.