Live : விழுப்புரத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு முதல்… தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் வரை.!
பரபரப்பான தமிழக அரசியல் நிலவரம், வானிலை நிலவரம், சிரியா அதிபர் தலைமறைவு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை உடனுக்குடன் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் 10 நாள்களுக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட அம்மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டு வந்தது. தற்போது நிலைமை சிறிது சீரடைந்திருக்கும் நிலையில், பள்ளிகள் திறக்கப்படுகின்றது.
தமிழக சட்டசபை இன்று கூடவுள்ளது. இதில் அரசுக்கு இந்த நிதியாண்டில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவுகள் குறித்து சபையில் விவாதிக்கப்பட்டு, துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும், மதுரை டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.