Live : வயநாடு இடைத்தேர்தல் பிரசாரம் முதல்.. சென்னைக்கு 5 நாட்கள் கனமழை வரை.!

இன்று நடைபெறும் அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.

Wayanad Election

சென்னை : வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இன்றுடன் பரப்புரை நிறைவடையுள்ள நிலையில், தங்கை பிரியங்காவுக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் 15ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 of 1
பால முருகன்

டி-ஷர்ட்டை பார்த்து ஆர்ப்பரித்த மக்கள்

  • வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் களத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களின் டி-ஷர்ட்டை பார்த்து ஆர்ப்பரித்த மக்கள்
  • மணிகண்டன்

    சீமான் விமர்சனம் :

  • நான் அதுல பாதி, இதுல பாதி இல்லை. எனது அரசியல் தமிழ் தேசிய அரசியல். என தவெக தலைவர் விஜயை மறைமுகமாக விமர்சித்து சீமான் பேசியுள்ளார்.
  • கெளதம்

    நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் மனு:

    சென்னையில் பிராமணர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட போது தெலுங்கு மக்கள் பற்றி அவதூறாக பேசியதாக பதிவான வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடிகை கஸ்தூரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

    கெளதம்

    வயநாடு இடைத்தேர்தல் பிரசாரம்:

  • வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இறுதிக்கட்டமாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நடத்திய ரோடு ஷோவில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.
  • மணிகண்டன்

    கனமழைக்கு வாய்ப்பு :

  • சென்னைக்கு வரும் நவம்பர் 15ஆம் தேதி வரையில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • கெளதம்

    நெடுமாறனை வரவேற்ற முதலமைச்சர் :

  • கம்யூனிச இயக்கத்தின் முதுபெரும் தலைவரான நல்லகண்ணுவின் நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்துகொள்ளுமாறு முதலமைச்சரிடம் அழைப்பிதழை வழங்கினார்.
  • கெளதம்

    தென்னரசு ஆய்வு :

  • விருதுநகரில் ராணி மங்கம்மாள், மருது பாண்டியர்களின் வரலாற்றுக்கு ஆதாரமாகத் திகழும் பழமையான சத்திரத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.
  • கெளதம்

    சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி:

  • தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
  • மணிகண்டன்

    பாஜகவுடன் கூட்டணி இல்லை

  • 2026 தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை. இது கட்சி சார்பில் முன்னரே முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
  • மணிகண்டன்

    100-ஐ தொட்ட வெங்காயம் :

  • மதுரை மாவட்டம் மேலூர் காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.100ஐ தொட்டுள்ளது.
  • மணிகண்டன்

    2வது எய்ம்ஸ் :

  • பீகார் மாநிலத்தில் 2வது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வரும் நவம்பர் 13ஆம் தேதி அடிக்கல் நாட்டுகிறார். தர்பங்காவில் இந்த 2வது எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.
  • கெளதம்

    உடல் தகனம்:

    நடிகர் டெல்லி கணேஷின் உடல் நெசப்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நண்பர்கள், உறவினர்கள் கண்ணீர் மல்க அவரின் இறுதிப் பயணத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    கெளதம்

    இறுதி ஊர்வலம் :

    மறைந்த டெல்லி கணேஷ் உடலுக்கு இந்தியா விமான படையினரால் விமானப்படை கொடி போர்த்தப்பட்டு அடக்கம் செய்யப்படுவதற்காக அவரது உடல் நெசப்பாக்கம் மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    கெளதம்

    விமானப்படை வீரர்கள் மரியாதை:

  • நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு இந்திய விமானப்படை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக டெல்லி கணேஷ், இந்திய விமானப்படை அதிகாரியாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
  • கெளதம்

    இறுதி ஊர்வலம் :

  • மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் உடல் இறுதி ஊர்வலத்திற்கு தயாரானது.அவரது உடல் நெசப்பாக்கம் மின் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளது.
  • மணிகண்டன்

    புதிய நீதிபதி :

  • நீதிபதி D.Y.சந்திரசூட்டின் பதவி காலம் முடிந்த பிறகு, புதிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தேர்வு செய்யப்பட்ட சஞ்சீவ் கன்னாவிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
  • மணிகண்டன்

    ‘உலகநாயகன்’ வேண்டாம் ;

  • நடிகர் கமல்ஹாசன் தனது திரையுலக பட்டமான ‘உலக நாயகன்’ என்பதை இனி எதிலும் குறிப்பிட வேண்டாம் என்றும் இனி கமல்ஹாசன் அல்லது KH என்று மட்டுமே தன்னை அழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
  • மணிகண்டன்

    20 கிலோ தங்கம் : 

  • சிங்கப்பூரில் இருந்து 3 விமானங்களில் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட சுமார் 20 கிலோ தங்கத்தை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் 18 கோடி ரூபாய் இருக்கும். 
  • மணிகண்டன்

    வழக்குப்பதிவு :

  • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் காரை வழிமறித்து அதிமுகவினரை அமமுகவினர் தாக்கியதாக சேடப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பெயரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • கெளதம்

    லாரி விபத்து

  • ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வெங்காய லோடு ஏற்றி வந்துள்ளது ஒரு சரக்கு லாரி, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அது வந்து கொண்டிருந்தபோது திடீரென அதில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.
  • இதில் லாரியின் முன்பக்க இன்ஜின் தீப்பிடித்து எரியத்தொடங்கியுள்ளது. நல்வாய்ப்பாக ஓட்டுநர் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி ஓடியதால் உயிர்தப்பினார்.
  • மணிகண்டன்

    ஆணழகன்

  • மாலத்தீவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த சரவணன் மணி என்பவர் ‘மிஸ்டர் யுனிவர்ஸ்’ பட்டத்தை வென்றுள்ளார். இவர் அடுத்ததாக Champion Of Champions போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
  • கெளதம்

    பள்ளிக்கல்வித்துறை :

  • பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் பணிகளை வெளிநபர்களை வைத்து மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கெளதம்

    பெண்களுக்கு மாதம் ரூ.2000:

  • மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலையொட்டி பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, பெண்களுக்கு மாதம் 2 ஆயிரத்து100 ரூபாய் வழங்கப்படும், 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
  • ஆட்சி அமைத்த 100 நாட்களில் டெக்னாலஜியை மேம்படுத்த விஷன் ஆவணம் அறிமுகம் செய்யப்படும் என பா.ஜ.க உறுதி கூறியுள்ளது.
  • கெளதம்

    காலை 10 மணி வரை மழை

  • தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
  • கெளதம்

    5 நாட்கள் கனமழை :

  • தமிழ்நாட்டில் இன்றுமுதல் நவ.15ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
  • கெளதம்

    மறைந்த டெல்லி கணேஷ்க்கு வடிவேலு இரங்கல்:

  • எனக்கு பிடித்த எத்தனையோ நடிகர்களில் அண்ணன் டெல்லி கணேசனும் ஒருவர். அவரின் யதார்த்தமான நடிப்பையும், அன்பையும் நான் இழந்துவிட்டேன். நாங்கள் இணைந்து பணியாற்றியதும், அவர் எனக்கு கொடுத்த அறிவுரைகளையும் என்னால் மறக்கவே முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
  • கெளதம்

    விவசாயிகள் குற்றச்சாட்டு:

    பாளையங்கோட்டை மகாராஜா நகர் உழவர் சந்தையில் விவசாயிகள், காய்கறிகள் வியாபாரத்தை புறக்கணித்து போராட்டம் நடத்துகின்றனர். ஒரு மாதத்திற்கு மேலாக பிரதான நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு.

    கெளதம்

    இலங்கை அதிபர் வாக்குறுதி :

    இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும் என தேர்தல் பொதுக்கூட்டத்தில் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க வாக்குறுதி அளித்துள்ளார்.

    கெளதம்

    தென்ஆப்பிரிக்க வெற்றி :

  • இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி
  • 1 of 1

    Follow us

    Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    லேட்டஸ்ட் செய்திகள்