Live : பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் முதல்.., தமிழக அரசியல் நகர்வுகள் வரை…

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் முதல் தமிழக அரசியல் நிலவரம் வரை பல்வேறு அரசியல் நகர்வுகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை : பாரிஸ் AI உச்சி மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு, பிரான்ஸ் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தற்போது அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அமெரிக்க தேசிய புலனாய்வு குழு தலைவர் துள்சி கப்பார்டு உடன் வாஷிங்டன் டி.சியில் சந்திப்பை நிகழ்த்தினார்.  அவருடன் இந்தியா – அமெரிக்கா உறவுகள் பற்றி ஆலோசித்ததாக தனது சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

அதிமுக உட்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எந்த தடையும் இல்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், என்னை சோதிக்காதீர்கள். பல வாய்ப்புகள் வந்தபோதும் கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என நினைத்தவன் நான் மறந்துவிடாதீர்கள் பேசியது என அதிமுக குறித்த பேச்சுக்கள் அரசியல் களத்தில் தற்போது மிக பரபரப்பாக இயங்கி வருகிறது.

1 of 1
மணிகண்டன்

ஓபிஎஸ் மனு :

  • அதிமுக விவகாரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் கூறிய நிலையில், உச்சநீதிமன்றத்தில் கேவியேட் மனு தாக்கல் செய்தார் ஓ.பன்னீர்செல்வம்.
  • மணிகண்டன்

    மறுஉருவம் இபிஎஸ் :

  • அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறு உருவமாக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.
  • மணிகண்டன்

    மக்களவை ஒத்திவைப்பு :

  • வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கமிட்டதால், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  • மணிகண்டன்

    தங்கம் விலை

  • தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.63,840 ஆகவும், 1 கிராம் தங்கம் ரூ,7,980க்கும் விற்பனை ஆகி வருகிறது.
  • மணிகண்டன்

    ஆர்.சி.பி அணியின் கேப்டன் யார்..?

    பெங்களூர் அணியில் இதற்குமுன் கேப்டனாக இருந்த ஃபாஃப் டூபிளஸிஸ் டெல்லி அணியில் உள்ளதால், நடப்பாண்டிற்கான IPL-ல் பெங்களூரு அணியின் கேப்டன் குறித்த அறிவிப்பு இன்று காலை 11.30 மணிக்கு வெளியாகிறது ரசிகர்கள் பலரும் விராட் கோலி கேப்டனாக வாய்ப்பிருப்பதாக கூறி வருகிறார்கள்.

    மணிகண்டன்

    சாலை விபத்தில் உடல் கருகி பலி

  • அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் சாலை தடுப்புச் சுவரில் மோதியதால் காரில் பற்றிய தீ – கார் கதவைத் திறக்க முடியாமல் உள்ளே சிக்கிய அன்பழகன் என்பவர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • 1 of 1

    Follow us

    Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    லேட்டஸ்ட் செய்திகள்