Live : மகாராஷ்டிரா ரயில் விபத்து முதல்…ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் வரை!
மகாராஷ்டிரா புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து முதல் ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் வரை இன்றயை முக்கியமான செய்திகள் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை : நேற்று (ஜனவரி 22 ) மாலை 5 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் மும்பை நோக்கி செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகளில் 12 பேர் வேறு ஒரு ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். அவசரகால பிரேக் என்பதால் தண்டவாளத்தில் உராய்வு ஏற்பட்டு தீப்பொறிகள் பறந்துள்ளன. இதனை பொதுப் பெட்டியில் இருந்த பயணிகள், ரயிலில் தீப்பிடித்துவிட்டது என வதந்தி பரவியதை நம்பி, அச்சத்தில், ரயிலில் இருந்து இரு வழிகளிலும் குதித்து ஓடியுள்ளனர். அப்போது அருகே இருந்த தண்டவாளத்தில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் இந்த பயணிகள் மீது அதே வேகத்தில் மோதியது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்று முதல் தபால் வாக்குப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இன்று முதல் 27ம் தேதி வரை வாக்கு சாவடி அலுவலர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று தபால் வாக்குகளை பதிவு செய்கின்றனர்.