Live : தமிழக அரசியல் நகர்வுகள் முதல்… உலக செய்திகள் வரை…
மதுரை டங்ஸ்டன் சுரங்க டெண்டர் ரத்து, அமெரிக்க குடியுரிமை திருத்த சட்டம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என பல்வேறு அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை இச்செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று மத்திய அரசு சுரங்கம் அமைக்க கோரப்பட்டிருந்த டெண்டரை ரத்து செய்தது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும், மதுரை மக்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் பிறப்பால் குடியுரிமை பெரும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். பிப்ரவரி 19க்கு பிறகு அமெரிக்க குடியுரிமை அல்லாதோருக்கு பிறந்த குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படாது என சட்டத்திருத்தத்தை டிரம்ப் கொண்டு வந்தார்.