Live : உள்ளூர் அரசியல் நிகழ்வுகள் முதல்.., சர்வதேச செய்திகள் வரை…

உள்ளூர் அரசியல் நகர்வுகள் முதல் சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை பல்வேறு தகவல்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

Live - 18042025

சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவுடன் கூட்டணி வைத்த மாநில கட்சிகள் காணாமல் போயுள்ளன. அதனால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO மற்றும் சர்வதேச விண்வெளி மைய ஒத்துழைப்புடன் வரும் மே மாதம் தொடங்க உள்ள விண்வெளி பயணத்தில், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டனான சுபான்சு சுக்லா, ஆக்ஸியம் மிஷன் 4 (Ax-4) மூலம் விண்வெளிக்குச் செல்கிறார்.இந்த நிகழ்வை இந்தியாவின் விண்வெளித்துறையில் ஒரு பெருமைமிக்க மைல்கல் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜித்தேந்திர சிங் பாராட்டியுள்ளார்.

1 of 1
மணிகண்டன்

தவெக பயிற்சி கூட்டம்

  • இன்று தவெக ஐடி விங் நிர்வாகிகள் கலந்து கொண்ட பயிற்சி கூட்டம் அக்கட்சி தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
  • மணிகண்டன்

    துரை வைகோ விலகல் : 

  • மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்த திருச்சி எம்.பி துரை வைகோ தற்போது தெரிவித்துள்ளார்.  
  • மணிகண்டன்

    ஆளுநர் ரவி டெல்லி பயணம் 

  • டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கருடன் தற்போது சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். 
  • பால முருகன்

    பஞ்சாப் முன்னேற்றம்!

  • பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றதன் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • பால முருகன்

    சொந்த மைதானத்தில் சொதப்பல்!

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது சொந்த கிரவுண்டில் அதிக தோல்வியை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் (46) தோல்விகளை சந்தித்து படைத்துள்ளது. இந்த சீசனில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி.
  • மணிகண்டன்

    விபத்து :

  • சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் கான்கிரீட் கலவை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, கவிழ்ந்ததால் கான்கிரீட் கலவை சாலையில் சிந்தி, சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  • மணிகண்டன்

    பழங்கால நாணயம் கண்டுபிடிப்பு :

  • கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் நடந்த தொல்லியல் கள ஆய்வின்போது 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர காலத்தின் நாணயம் கண்டெடுக்கப்பட்டது.
  • மணிகண்டன்

    0% கஞ்சா :

  • தமிழக காவல்துறையின் தொடர் நடவடிக்கைகளால் பூஜ்ஜியம் சதவீதம் கஞ்சா பயிரிடும் மாநிலமாக தமிழ்நாடு தற்பொழுது இருந்து வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
  • மணிகண்டன்

    AC ரயில் :

  • சென்னையில் முதல் முதலாக குளிர்சாதன பெட்டிகள் பொருத்தப்பட்ட புறநகர் மின்சார ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையில் இச்சேவை இயக்கப்பட உள்ளது.
  • 1 of 1

    Follow us

    Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    லேட்டஸ்ட் செய்திகள்