சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம் தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினமாக பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் உலகில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் பொதுவெளியில் பேசுகையில் கவனமாக பேச வேண்டும் என்றும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக – பாஜக கூட்டணி
அதிமுகவுடனான கூட்டணி குறித்து பாஜக தொண்டர்கள் யாரும் பேச வேண்டாம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சி நிகழ்வில் பேசியுள்ளார்.
முதலமைச்சர் அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய 5 அறிவிப்புகளை விழா மேடையில் அறிவித்தார்.
அமெரிக்க தாக்குதல் :
ஏமன் நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியதில் இதுவரை 38 பேர் உயிரிழந்ததாகவும், 102 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீயின் உடல்நிலை
நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதாக அறிக்கை ஒன்றை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
தங்கம் விலை :
சென்னையில் ஆபரண தங்கள் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.71,560 என்றும், ஒரு கிராம் ரூ.8,945 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.
கடற்கொள்ளையர்கள் :
கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுப்பேட்டை மீனவர்கள் 4 பேர் மீது தாக்குதல் நடத்திய இலங்கையைச் சேர்ந்த 3 நபர்கள் மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சித்திரை திருவிழா கொடியேற்றம் :
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோயிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேரோட்டம் ஏப்ரல் 26-ல் நடைபெற உள்ளது.
ரீ-ரிலீஸ் :
விஜய் நடிப்பில் 2005-ல் வெளியான சச்சின் திரைப்படம் இன்று ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது. அதற்கு விஜய் ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர்.
ரோஹித் 100*
மும்பை வான்கடே மைதானத்தில் 100 ஐபிஎல் சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றார் மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் சர்மா. 85 சிக்ஸர்கள் உடன் பொல்லார்ட் 2ஆம் இடத்தில் உள்ளார்.